சந்தோசமாக துபாய்-க்கு சென்ற அப்பா,மகனுக்கு நேர்ந்த சோகம் பிணமாக வீடு திரும்பியதால் மக்கள் அதிர்ச்சி

Update: 2025-02-17 03:04 GMT

துபாயில் நீச்சல் பயின்றபோது குளத்தில் மூழ்கி நெல்லையை சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துபாயில் உள்ள தந்தை மாதவன் என்பவருடன் விடுமுறையை கழிக்க மகன் கிருஷ்ண சங்கர் சென்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்தபோது மகன் கிருஷ்ண சங்கர் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். மகனை காப்பாற்ற தந்தை மாதவன் முயன்றபோது, இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் இருவரின் உடலும் நெல்லைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்