Cow | Dog | Viral Video |தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடி வீட்டின் கூரை மீது ஏறிய மாடு
ஆந்திராவில், தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க மாடு ஒன்று, வீட்டின் கூரை மீது ஏறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஷேக் கபூர் என்ற விவசாயி, தனது வீட்டிற்கு வெளியே, மாட்டை கட்டி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த தெருநாய் கூட்டம் மாட்டை சூழ்ந்து தாக்கியுள்ளது. இதையடுத்து கயிற்றிலிருந்து விடுவித்துக்கொண்டு அங்கிருந்து தலைதெறிக்க ஓடிய மாடு, ஒரு வீட்டின் கூரையின் மீது ஏறி நின்றது.
இதனால் திகைத்துப்போன கிராம மக்கள், நீண்ட முயற்சிக்குப் பிறகு, மாட்டை கீழே இறக்கி வந்தனர். இந்த சம்பவத்தில் கூரை லேசாக சேதமடைந்தது.