3 ஆயிரத்தை கடந்தது.. மீண்டும் மிரட்ட ஆரம்பித்த கொரோனா - வெளியான ஷாக் ரிப்போர்ட்
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், மே மாதம் 22ஆம் தேதியன்று, 257 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகி இருந்த நிலையில், மே 31ஆம் தேதி, 3 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக, கேரளாவில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் மிக குறைவாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.