லடாக் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதி அருகே சீனா உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அங்கு இந்திய நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது..
ஜம்மு காஷ்மீரின் லடாக் அருகே அமைந்துள்ள ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள நிலையில்,
இந்தியா சட்டவிரோதமாக கருதும் 1963 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீனா, பாகிஸ்தான் இடையிலான எல்லை ஒப்பந்தத்தின் படி,
ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு வழியாக சீனா பாகிஸ்தானை இணைக்கும் பாதை செல்வதற்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.