டேங்கர் லாரி மீது மோதி தீப்பிடித்து மளமளவென எரிந்த கார்.. திக் திக் காட்சிகள்
கேரள மாநிலம் எர்ணாகுளம் - ஆலுவா தேசிய நெடுஞ்சாலையில் அம்பாட்டுக்காவு என்ற இடத்தில் அதிவேகமாக வந்த கார், டேங்கர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது டேங்கர் லாரியில் இடித்து தீப்பிடிக்க தொடங்கியது. காரின் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவம் அறிந்த தீயணைப்புத் துறையினர் முற்றிலும் எரிந்த காரின் தீயை அணைத்தனர். அதிகாலை வேளை என்பதால் பெறும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.