ஹிமாச்சல பிரதேசத்தில், 500 அடி பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து உருண்டு விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹிமாசலப் பிரதேச மாநிலம், சிர்மவுர் மாவட்டத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் 14 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் இருந்து, பொதுமக்கள் திரண்டு மீட்பு பணிக்கு உதவிய காட்சிகள் வெளியாகி உள்ளன. காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.