Kerala | டீ கடைக்கு சென்று சிப்ஸ் சாப்பிட்ட பிரிட்டன் போர் விமானம் - டைமிங் பார்த்து அடித்த கேரளா
பிரிட்டனின் F35 போர் விமானம் கேரளாவில் இருந்து வெளியேற விரும்பாமல் இருப்பதாகக் கூறி, கேரள சுற்றுலாத்துறை நன்றி தெரிவித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது. கடந்த ஜூன் 14ஆம் தேதி எரிபொருள் பிரச்சினையால், பிரிட்டனின் F35 போர் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பின்னர், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யமுடியாததால், தற்போது வரை திருவனந்தபுரத்திலேயே உள்ளது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி கேரள சுற்றுலாத்துறை வித்தியாசமான முறையில் சமூக வலைதள பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளது. கேரளா மிகவும் அருமையான இடம் என்றும், இங்கிருந்து வெளியேற விருப்பம் இல்லை என்றும் F35 போர் விமானம் செல்லி, Five Stare ரேட்டிங் கொடுத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளது. யாரும் வெளியேற விரும்பாத இடம் கேரளா என்றும், நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளது. இதையடுத்து, F35 விமானம் கேரளாவில் டீக்கடைக்கு செல்வது, இளநீர் குடிப்பது, சிப்ஸ் சாப்பிடுவது போன்று படங்களை பகிர்ந்து வருகின்றனர்.