BrahMos | வங்கக்கடலில் வெற்றியடைந்த பரிசோதனை.. துல்லியமாக தாக்கிய பிரமோஸ் சூப்பர்சோனிக்..
பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை, வங்கக் கடலில் இந்திய ராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்தது. சோதனையின்போது, இந்த ஏவுகணை, அதிவேகத்தில் சென்று துல்லியமாக இலக்கை தாக்கி அழித்தது என்று இந்திய ராணுவத்தின் தெற்கு படைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் வெற்றி, நீண்ட தூர துல்லியமான தாக்குதல்களை நடத்தும் ராணுவத்தின் திறனை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது என்றும், பாதுகாப்பு துறையின் சுயசார்பு திட்டத்திற்கு வலு சேர்த்துள்ளது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.