உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 2 இளைஞர்கள், நேருக்கு நேர் மோதி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சாலை இன்னும் திறக்கப்படாத நிலையில், இளைஞர்கள் அத்துமீறி சாகசத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.