Bihar Results 2025 | காங்கிரஸ் கூட்டணியின் அதலபாதாள தோல்விக்கு காரணம் - கவனம் பெறும் 2 விஷயம்
பீகாரில் காங். கூட்டணிக்கு பின்னடைவு - காரணம் என்ன? பீகாரில் காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.. பீகார் சட்டசபை தேர்தலில் NDA கூட்டணி அலையில் RJD தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணி அடித்துச் செல்லப்பட்டது... இக்கூட்டணியின் 2வது பெரிய கட்சியான காங்கிரஸ் சமூக நீதி அரசியல் முதல் சமீபத்திய வாக்கு திருட்டு பிரச்சாரம் வரை NDA கூட்டணிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் அவை எடுபடவில்லை. தேர்தல் நெருங்கிய நேரத்தில் சுமார் 1 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் முக்கியமந்திரி மஹிலா ரோஸ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் தலா 10 ஆயிரம் ரூபாயை நிதிஷ்குமார் அரசாங்கம் செலுத்தியது NDA கூட்டணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. வாக்கு திருட்டு மற்றும் SIR போன்றவற்றில் காங்கிரஸ் கூட்டணி கவனம் செலுத்திய நிலையில், வேலைவாய்ப்புகள், மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், அதனால் வாக்கு சதவீதம் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.