Kerala Gobernador | காவிக்கொடியுடன் பாரத மாதா புகைப்படம் - கேரள ஆளுநர் மாளிகையில் சர்ச்சை

Update: 2025-06-09 07:09 GMT

கேரள ஆளுனர் மாளிகை நிகழ்ச்சியில் காவி கொடி பிடித்த பாரதமாதாவின் உருவ படம் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் மாநில வேளாண் அமைச்சர் பிரசாத் ஆகியோர் இணைந்து ராஜ்பவனில் சுற்றுச்சூழல் தின விழாவைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் விழா மேடையில் கையில் காவிக்கொடயுடன் பாரதமாதா உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியை புறக்கணித்தார். இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுனர் அமைச்சரை விமர்சித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து அமைச்சர் தரப்பில் கூறும் போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயன்படுத்தும் புகைப்படத்தை பயன்படுத்தியதால் நிகழ்ச்சியை புறகணித்ததாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்