"கேரள மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை" - கேரள ஐகோர்ட் உத்தரவு
கேரள மலையோர பகுதிகளில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொதுநல வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினம் முதல் இந்த தடை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. கேரள மலையோர பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது என தெரிவித்துள்ள உயர்நிதிமன்றம், தண்ணீர் குடிப்பதற்கு ஸ்டீல், காப்பர் டம்பளர்களை பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.