திருப்பதி - ஜூனில் மட்டும் 24.08 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 24.08 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு உண்டியல் வருவாயாக 110 கோடி ரூபாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் கூடுதலாக 120.35 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், 10.11 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை வழங்கியுள்ளதாகவும், 1.19 கோடி லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது..