"காந்தாரா 2" படத்தில் பணியாற்றி வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

Update: 2025-06-14 05:38 GMT

காந்தாரா திரைப்பட குழுவில் இருந்த இருவர் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், படத்தின் நகைச்சுவை நடிகர் ராகேஷ் மற்றும் எம். எஃப். கபில் ஆகியோர் கடந்த மாதம் உயிரிழந்தனர். தற்போது காந்தாரா-2வில் பணியாற்றி வந்த மிமிக்ரி மற்றும் திரைப்பட கலைஞர் விஜூ வி.கே, தீர்த்தஹள்ளியில் மாரடைப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம் படக்குழுவினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்