மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விபத்து - அதிகாரிகள் எடுத்த திடீர் முடிவு
கொச்சி அருகே கடலில் கவிழ்ந்த எம்எஸ்சி எல்சா 3 கப்பல் விபத்து தொடர்பாக கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் இருந்த ஷிப் மாஸ்டர் உள்ளிட்ட 5 பேரின் பாஸ்போர்ட்டை கடலோர காவல் குழுமம் திடீரென பறிமுதல் செய்தது. திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து, கொச்சி துறைமுகத்துக்கு
புறப்பட்டுச்சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற சைபீரியா நாட்டு சரக்கு கப்பல், மே 24-ம் தேதி கொச்சி அருகே விபத்தில் சிக்கியது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கப்பல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த போர்ட் கொச்சி போலீசார், ஆபத்தை விளைவிக்கக்கூடிய சரக்குகளும், வெடிபொருட்களும் கப்பலில் இருப்பது தெரிந்தும், மனித உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விபத்தை ஏற்படுத்தியதாக கப்பல் உரிமையாளர் , கப்பல் கேப்டன் மற்றும் கப்பல் ஊழியர்களை குற்றவாளிகளாக சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.