``ஆதார் இந்திய குடியுரிமைக்கான சான்று அல்ல’’ உறுதி செய்த உச்சநீதிமன்றம்
ஆதார் குடியுரிமைக்கான ஆவணம் அல்ல - உச்சநீதிமன்றம்
குடியுரிமைக்கான ஆவணமாக ஆதார் அட்டையை ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவது சரியானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஆதார் எண்ணை இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றும், பிரமாணங்களையும் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மீது அவநம்பிக்கை தவிர வேறு எந்தப் பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறினர்.