கங்கையில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்... உயிரை காத்த சங்கிலி- பரபரப்பு காட்சி
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில் புனித நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், ஆற்றின் பலத்த நீரோட்டம் காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார். நிர்ஜலா ஏகாதசியை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்திருந்த இளைஞர், ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஹாதி பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சங்கிலிகளைப் பிடித்து உயிர்தப்பினார்.