Uttar Pradesh | bike | தானாக சாலையில் ஓடிய பைக் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
உத்தர பிரதேசம் மாநிலத்தில் சாலையில் ஏற்பட்ட விபத்தால், ஓட்டுநர் இன்றி தானாகவே சென்ற இருசக்கர வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாப்பூர் பகுதியில், தந்தையும் மகனும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மற்றொரு வாகனம் மோதியது. இதில், இருவரும் கீழே விழுந்த நிலையில், பைக் மட்டும் தனியாக ஓட்டுநர் இன்றி 100 மீட்டர் வரை சென்று, உணவகம் ஒன்றின் மீது மோதி நின்றது.