இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்கம்.. ஆசியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் நம்ம தமிழக பாடரில்

Update: 2025-09-17 06:22 GMT

ஆசிய கண்டத்தில் சிறந்த சுற்றுலா கிராமம் மூணாறு

ஆசிய கண்டத்தில் சிறந்த சுற்றுலா கிராமமாக மூணாறை தேர்வு செய்து, மத்திய சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது. இதனால் மூணாறு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மூணாறில் இயற்கை எழில்மிகு பகுதிகளும், பச்சை பசேல் என்ற தேயிலை தோட்டங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றை அனுபவித்தவாறு அங்குள்ள நீரோடைகள், ஆறுகளை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். உள்நாட்டவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களையும் மூணாறு வெகுவாக கவர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்