ஆசை ஆசையாய் கணவனை பார்க்க சென்ற புதுமணப் பெண்...விமான விபத்துக்குமுன் எடுத்த கடைசி வீடியோ
ஆசை ஆசையாய் கணவனை பார்க்க சென்ற புதுமணப் பெண்... விமான விபத்துக்குமுன் எடுத்த கடைசி வீடியோ
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் புதுமணப் பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா பகுதியைச் சேர்ந்த குஷ்பு ராஜ்புரோஹித் என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. அவரது கணவர் லண்டனில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு
முதன்முறையாக லண்டனில் உள்ள தனது கணவரை சந்திப்பதற்காக புறப்பட்ட, குஷ்பு ராஜ்புரோஹித், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தார்.
இதனிடையே, அவரது தந்தை அகமதாபாத் விமான நிலையத்தில் இறக்கிவிட வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் குஷ்பு ராஜ்புரோஹித் விமான நிலையத்திற்குள் நுழையும் கடைசி வீடியோ வெளியாகியுள்ளது.