``என் புள்ளையவா தொட்ட''... புலியை புரட்டி எடுத்த கரடி... மிரட்டல் காட்சி
ஆந்திர வனப்பகுதியில், புலியிடம் இருந்து தனது குட்டியை தாய் கரடி மீட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலம் நல்லமலை வனப்பகுதியில் புலி ஒன்று, அங்கிருந்த கரடி குட்டியை வேட்டையாட முயன்றது. இதைப் பார்த்தவுடன் தாய் கரடி ஓடி வந்ததால், கரடி குட்டியை அங்கேயே போட்டுவிட்டு புலி ஓட்டம் பிடித்தது. புலியை விரட்டிய தாய் கரடி, பின்னர் தனது குட்டியை அழைத்துச் சென்றது.