சொந்த மாநிலம் திரும்பும் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 - அதிரடி அறிவிப்பு

Update: 2025-08-20 03:33 GMT

மே.வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5,000

பிற மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு, மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்த மேற்கு வங்க தொழிலார்களுக்காக 'ஷ்ரமஸ்ரீ' திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். வேறு மாநிலங்களில் வேலை செய்துவரும் மேற்கு வங்க தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு திரும்ப கொண்டுவருவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கு வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு, மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகையானது ஓராண்டுக்கோ அல்லது அவர்களுக்கு மேற்கு வங்கத்தில் வேலை கிடைக்கும் வரையோ வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்