வெள்ளத்திற்கு இரையான 29 பேர் - பதறியடித்து ஓடி வந்த அரசியல் புள்ளிகள்

Update: 2025-09-02 08:19 GMT

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்திற்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் மாநிலம் அருகே உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பகுதிகள் கடும் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. குறிப்பாக சட்லஜ் ரவி மற்றும் பியாஸ் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்கள் கடும் வெள்ள சேதங்களை சந்தித்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் அமைச்சர்கள் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்