பரோட்டா கேட்டு கடை உரிமையாளரை தாக்கிய 2 இளைஞர்கள் - கேரளாவில் பரபரப்பு

Update: 2025-05-15 02:22 GMT

கேரளா மாநிலம் கொல்லம் அருகே உணவகத்தில் பரோட்டா கேட்டு கடை உரிமையாளரிடம் 2 இளைஞர்கள் சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிவள்ளூர் அமுல் குமார் என்பவரது கடைக்கு வந்த இளைஞர்கள் பரோட்டா தீர்ந்துவிட்டதாக கூறியும் தொடர்ந்து பரோட்டா கேட்டு வாக்குவாதம் செய்து கடை உரிமையாளரை தாக்கியுள்ளனர். இதில் அவர் காயமடைந்த நிலையில் சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் மற்றொருவரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்