17 பேர் பலி.. 1,65,136 பேர் பாதிப்பு - மக்களே உஷார்.. நடுங்கவிடும் தகவல்
கேரளாவில் 5 மாதங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 136 பேர் நாய்க்கடி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ரேபிஸ் நோய்க்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். சமூக ஆர்வலர் ராஜூ என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது. குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டுமே 9 ஆயிரத்து 619 பேர் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல, ஆலப்புழா மாவட்டத்தில் ரேபிஸ் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியுள்ளன.