காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (30-03-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
திமுகவும் -அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன...
அ.ம.மு.க. பொதுச் செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான டிடிவி தினகரன் குற்றச்சாட்டு...நதியில் தாமரை மலர்ந்தால் எப்படி நதி கெட்டுப்போகுமோ, அப்படித்தான் நாட்டில் தாமரை மலர்ந்தால் நாடு கெட்டுப்போகும்...
ஈரோட்டில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்துப் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு...
நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால்தான்
மகளிர் உரிமை தொகை திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றியது...
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து மதுராந்தகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்...
முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்...
இன்று மாலையே இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது...
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மரணம்...
மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பிரிந்தது...