இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்தியதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகிழ்ச்சி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசை மூலம் தமிழ்நாட்டுக்கே தனிப்பெருமையை தேடி தந்தவர் இளையராஜா என்றும், சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்களிசை இவற்றுக்கு இடையே ஏற்பட்ட வேறுபாடுகளை தம் இசை வழியே ஒன்றாக்கிய இசைமேதை இளையராஜா என கூறினார்.