முதன்முறை பணியில் சேர்வோருக்கு குட் நியூஸ் - வெளியான அறிவிப்பு

Update: 2025-07-01 14:50 GMT

முதன்முறை பணியில் சேர்வோருக்கு ரூ.15000 மானியம்.

வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ELI எனப்படும் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து முறைசார் துறைகளிலும் முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் மானியமாக வழங்கப்படும்.

அதன்படி ரூ.15000 வரை இரண்டு தவணைகளாக நேரடி பண பரிமாற்றம் மூலம் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக வேலை வழங்கும் நிறுவனங்களுக்கும் ஒரு வருடம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

உற்பத்தித் துறைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகள் வழங்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்