ஜெயங்கொண்டம் அருகே குடும்பப் பிரச்சனையில் கூட்டுறவு சொசைட்டி பெண் கணக்காளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இலையூர் கீழத் தெருவை சேர்ந்த பாலமுருகன் மனைவி தேன்மொழி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இதனிடையே மகள் சாவில் மர்மம் இருப்பதாக, தேன்மொழியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.