Salman Khanக்கு கொலை மிரட்டல் | வீட்டிற்குள் திடீரென நுழைய முயன்ற பெண்ணால் அதிர்ச்சி

Update: 2025-05-22 15:43 GMT

நடிகர் சல்மான் கான் வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் இரண்டு நபர்கள் சல்மான் கான் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கானுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் உள்ள நிலையில், அவர் Y பிளஸ் பாதுகாப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் பாண்ட்ராவில் உள்ள சல்மான் கானின் கேலக்சி அபார்ட்மெண்ட் இல்லத்திற்குள் புதன்கிழமை மாலை பெண் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்