சிம்புவுக்கு பெண் வேடமா..? - STR 50 அப்டேட்.. அப்போ தரமான சம்பவம் இருக்கு
Simbu | STR 50 | சிம்புவுக்கு பெண் வேடமா..? - STR 50 அப்டேட்.. அப்போ தரமான சம்பவம் இருக்கு
சிலம்பரசன் அடுத்தடுத்து படங்கள் நடிச்சாலும், அவரோட ரசிகர்கள் மட்டுமில்லாம, கோலிவுட்ல பலர் ஆவலோட எதிர்பார்க்குற படம்னா STR 50தான்..
ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் தாணுனு பல ஜாம்பவான்கள் புகழ்ந்து தள்ளியிருக்க கதை.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கப்புறம் ஒரு செம்ம கதையோட வெறியோட வெயிட் பண்ணிட்டு இருக்காரு தேசிங்கு பெரியசாமி.
முன்னாடி கமலோட ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்குறதா இருந்தப்ப, கடைசி நேரத்துல அவங்க விலக, தன்னோட பிறந்தநாள் அப்ப, STR 50 படத்தை தானே தயாரிக்கப்போறதா சிலம்பரசன் அறிவிச்சாரு.
இப்படி இருக்க, தக் லைஃப் நிகழ்ச்சியப்ப பேசுன கமல்ஹாசன், இந்த படத்துல சிலம்பரசனை நடிக்க வைப்பதற்காக, STR 50 படத்தை கைவிட வேண்டிய நிலை வந்ததா ஒரு தயாரிப்பாளரா சொன்னாரு.
தொடர்ந்து தயாரிப்பாளரா பேசுன சிலம்பரசன், இந்த கதை மேல நம்பிக்கை இருக்கநாள தயாரிப்பாளர் ஆயிட்டதா சொன்னாரு.
மேலும், சிவாஜி, கமல், அஜித் மாதிரி STR 50 படத்துல பெண் வேடத்தில் சிலம்பரசன் நடிக்கப்போறதையும் உறுதியா சொல்லிட்டாரு.