சிறை செல்வாரா, தப்புவாரா? சல்மான் கானுக்கு என்ன வாய்ப்பு ?

Update: 2025-07-31 05:03 GMT

செப். 22-ல் நடிகர் சல்மான் கானின் மேல்முறையீடு மனு விசாரணை

நடிகர் சல்மான் கானுக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனை ரத்தாகுமா?

நடிகர் சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானை 'குற்றவாளி' என ஜோத்பூர் கீழமை நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் தரப்பிலிருந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதேபோல, ராஜஸ்தான் அரசு தரப்பிலிருந்தும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து வரும் செப்டம்பர் 22ஆம் தேதி இந்த மனுக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்