ஜனநாயகன் படம் வெளியாக வேண்டி மொட்டையடித்த ரசிகை
ஜனநாயகன் திரைப்படம் வெளியாக வேண்டி
விஜய் ரசிகை ஒருவர் மொட்டையடித்துக்கொண்டு கோயிலில் வழிபாடு நடத்தினார்.
சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா மதன் என்பவர், சிறு வயது முதலே விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறார். தனது வலது கையில் விஜய்யின் புகைப்படத்தை டாட்டூவாக வரைந்துள்ளார். தவெ.க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மகளிர் அணியில் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் வெளியாக வேண்டி, நேர்த்திக்கடனாக மொட்டையடித்துக் கொண்டு, அப்பகுதியில் உள்ள அயோத்தி அம்மன் ஆலயத்தில் வழிபட்டார்.