"விடுதலை போல இன்னொரு படம் பண்ண முடியுமான்னு தெரியல" - இயக்குநர் வெற்றிமாறன் நெகிழ்ச்சி

Update: 2025-02-18 02:03 GMT

"விடுதலை போல இன்னொரு படம் பண்ண முடியுமான்னு தெரியல" - இயக்குநர் வெற்றிமாறன் நெகிழ்ச்சி

விடுதலை திரைப்படம் என்னை மென்மேலும் மெருகேற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்க வைக்கும் ஒரு திரைப்படம் என இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிறந்த திரைக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் 'விடுதலை 2' படத்திற்காக வெற்றிமாறனுக்கு 'Caib Award' என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பெற்றபின் தொடர்ந்து பேசிய வெற்றிமாறன் விடுதலை திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒரு திரைப்படம் எனக்கூறிய அவர், இதற்குப் பிறகு விடுதலை போல இன்னொரு படம் பண்ண முடியுமா, அமையுமா என்று தெரியவில்லை" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்