Upendra | உபேந்திரா மனைவிக்கு ஏற்பட்ட `திடுக்’ - பீகாரில் வைத்து சம்பவக்காரனை தூக்கிய போலீஸ்

Update: 2025-11-13 04:11 GMT

நடிகர் உபேந்திராவின் மனைவி செல்போனை ஹேக் செய்தவர் கைது

கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவி பிரியங்காவின் போன் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில், பீகார் மாநிலத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த விவகாரத்தில், பிரியங்காவின் போன் மற்றும் வாட்சப் ஹேக் செய்யப்பட்டு, 1.5 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், பீகார் தாஷ்ரத்பூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சைபர் க்ரைம் குற்றத்தில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றவாளி விகாஷ் குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்