'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது - கேரள உயர்நீதிமன்றம் திட்டவட்டம். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் ஷோன் ஆண்டனி, பாபு சாஹிர், சவுபின் சாகிர் மீதான மோசடி புகார். ரூ.7 கோடி பெற்றுக்கொண்டு பணத்தையோ, லாப விகிதத்தையோ தரவில்லை என சிராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு. போலி ஆதாரங்கள் தயாரித்தல், கிரிமினல் கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து எர்ணாகுளம் நீதிமன்றம் விசாரணை. வழக்கில் இருந்து முன் ஜாமின் பெற்றுள்ள மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள். வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - கேரள உயர்நீதிமன்றம்