தமிழ் திரையுலகில் 'நடிகர் திலகம்' என அன்போடு அழைக்கப்படும் சிவாஜி கணேசனின் 24-ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது.
1927-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி விழுப்புரத்தில் பிறந்த சிவாஜி கணேசன், சிறுவயது முதல் நாடகங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தனது முதல் நாடகமான ராமாயணத்தில் சீதை வேடத்தில் நடித்திருந்தார்.
பின்னர், சித்ரபதி சிவாஜி நாடகத்தில், வி.சி.கணேசனாக, அதாவது விழுப்புரம் சின்னய்யா கணேசனாக அறிமுகமாகி நடித்த பின் "சிவாஜி கணேசன்' என அழைக்கப்பட்டார். 1952-ஆம் ஆண்டில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான பராசக்தி படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த சிவாஜி கணேசன், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி உடல் நலக்குறைவால் அவர் காலமானார். அவருடைய நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.