இணையும் சூர்யா - மமிதா... எகிறும் `சூர்யா 46' எதிர்பார்ப்பு

Update: 2025-05-19 16:19 GMT

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும், நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் வசூலில் வெற்றிபெற்றுள்ள சூழலில், லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்