ரெட்ரோ படத்தை முடிச்ச சூர்யா, அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்துல நடிச்சிட்டு இருக்காரு. இந்த படத்தோட தலைப்பு மற்றும் பல அப்டேட்கள் ஒன்னொன்னா வரபோகுது.இப்படி இருக்க சூர்யா அடுத்த படத்திலும் ஸ்டார்ட் பண்ணிட்டாரு...
வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை கொடுத்த வெங்கி அட்லூரி இயக்கத்துல சூர்யா நடிக்க போறாரு.கதாநாயகியா பிரேமலு மூலம் ஆல் இந்தியா ஃபேமசான மமிதா பைஜு நடிக்கப்போறாங்க.. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கப்போறாரு...
இப்படி சூப்பர் காம்போல சூர்யா 46 உருவாகப்போகுது.சமீபத்துல படம் குறித்து சூர்யா அதிகாரப்பூர்வமா அறிவிக்க, இப்ப பூஜையோட படத்தை ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க.. பூஜை கிளிக்ஸ் சோசியல் மீடியாவுல வைரலா சுத்திட்டு இருக்கு...
ஒருபக்கம் சூரரைப்போற்று படத்திற்கு அப்புறம் சூர்யாவுடன் படம்.. இந்த பக்கம், லக்கி பாஸ்கர், வாத்தி படங்களுக்கு அப்புறம் வெங்கி அட்லுரியோட சேர போறேன்.. நிச்சயம் சூர்யா 46 படம் ஸ்பெஷல்னு நெகிழ்ந்திருக்காரு ஜி.வி. பிரகாஷ்....