ரேணுகா சாமி கொலை வழக்கில், ஜாமீன் வழங்கியதை எதிர்த்த கர்நாடக அரசின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்குமாறு நடிகர் தர்ஷன், பவித்ரா கௌடா உள்ளிட்ட 7 பேருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல கன்னட நடிகரான தர்ஷனைத் தொடர்ந்து, பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கும் டிசம்பர் 13ஆம் தேதி தேதி, ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து இந்த மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.