Singapore | திரைப்பட விழாவில் பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர் - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ
சிங்கப்பூரில் நடைபெற்ற திரைப்பட விழாவில், நடிகையிடம் ரசிகர் அத்துமீறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. சிங்கப்பூரில் நடைபெற்ற பசிபிக் ஃபிலிம் பிரீமியர் நிகழ்ச்சியில், பிரபல நடிகை அரியானா கிராண்டே பங்கேற்றார். அவர் விழா மேடைக்கு வந்தபோது தடுப்புகளைத் தாண்டி ரசிகர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததுடன், அரியானா கிராண்டே தோள்களில் கையைப் போட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக பாதுகாவலர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.