சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகை சனம் ஷெட்டி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஆடிஷன் என்கிற பெயரில் என்ன வேண்டுமானாலும் கேட்பீர்களா? இத்தனை பெண்களின் சாபத்தை சம்பாதித்து ஒரு படத்தை எடுத்து நீங்கள் நல்லா இருப்பீங்களா? என்று ஆவேசமாக பேசியுள்ளார். இதில் சம்பந்தபட்டவர்களுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.