Selvaraghavan | ThulluvadhoIlamai | "துள்ளுவதோ இளமை இல்லனா நா இல்ல.." - உருக்கமாக பேசிய செல்வராகவன்

Update: 2025-11-05 02:09 GMT

புது விதமான ஒரு துப்பறியும் கதையை தந்து ரசிகர்களுக்கு பரிசாக்கியிருக்கிறது ஆர்யன் திரைப்படம்...

ஆர்யன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.. இதில் பேசிய இயக்குனர் செல்வராகவன் 7G rainbow colony 2 விரைவில் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்...

2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படம் இல்லை என்றால் நான் இல்லை எனவும் உணர்ச்சிபட பேசியிருக்கிறார்....

ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 படங்களும் நிச்சயம் வெளிவரும் எனவும் செல்வராகவன் தெரிவித்தார்...

அந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் என்னுடைய கேரியரில் மற்ற படங்களை விட ஆர்யன் படத்திற்கு தான் நல்ல opening கிடைத்துள்ளது என கூறினார்..

தொடர்ந்து நான் unique-ஆன படங்களில் நடிக்க வில்லை என்றால் எப்பொழுதோ சினிமா உலகத்திலிருந்து காணாமல் போய் இருப்பேன் எனவும் வி​ஷ்ணு விஷால் பேசினார்...

Tags:    

மேலும் செய்திகள்