Cheyyar Protest | Sipcot |"இதுக்கு ஒரு முடிவு சொல்லிட்டு போங்க.." -திடீரென ஊரோடு கிளம்பி வந்த மக்கள்
செய்யாறு மேல்மா சிப்காட் விவசாயிகள், நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிப்காட் விரிவாகத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற மாவட்ட வருவாய் அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.