ரெட்ரோ படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தை வெகுவாக பாராட்டியதாக கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மொத்த குழுவும் எவ்வளவு மெனக்கெட்டுள்ளீர்கள் என கூறிய ரஜினிகாந்த், சூர்யாவின் நடிப்பு சூப்பர் என்றும் படத்தின் கடைசி 40 நிமிடங்கள் மிக அருமையாக இருந்ததாகவும், அந்த சிரிப்பு டச் சிறப்பாக இருந்தது என்றும் வாழ்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார். பாரியை வாழ்த்திய ஜானி என பதிவிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, ரஜினி இருவரும் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.