தங்க கடத்தல் வழக்கில் கைதான நடிகை
ரன்யா ராவ் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு, கர்நாடக அரசு 12 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துமகூரின் சிரா தொழிற்பேட்டையில், செயல்பட்டு வரும் 'க்சிரோடா இந்தியா பிரைவேட்' நிறுவனத்திற்கு
2023ஆம் ஆண்டு 12 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு செய்ததில் அரசியல் தொடர்பு இருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது. இதனிடையே, கர்நாடகா தொழில்துறை மேம்பாட்டு வாரியம், 138 கோடி ரூபாய் முதலீட்டில் TMT கம்பிகள் உற்பத்தி ஆலை அமைந்ததால் 160 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற அடிப்படையில் நிலம் ஒதுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.