ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியை, நடிகரும், ஆந்திரா மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் நேரில் சந்தித்து பாராட்டினார். பவன் கல்யாண் நடிக்கும் 'ஹரி ஹர வீர மல்லு' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் 'அசுர ஹனானம்' வரும் 21-ம் தேதி வெளியாகிறது. இந்த படம், ஜூன் 12ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த சூழலில், இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணியை பவன் கல்யாண் உட்பட 'ஹரி ஹர வீர மல்லு' படக்குழுவினரும் இணைந்து அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். இதனிடையே, தங்களது சந்திப்பு குறித்து படக்குழுவினர் வெளியிட்ட வீடியோ தற்போது வரவேற்பை பெற்று வருகிறது.