தங்களோட படம் ரிலீஸ் அப்ப, சுவாரஸ்யத்துக்காக கதை திரைக்கதை பத்தி பெரும்பாலான இயக்குநர்கள் பெருஷா வெளிய சொல்ல மாட்டாங்க... ஆனா, மிஷ்கின் அசால்ல்டா தன்னோட கதை இதுதான்னு அப்படியே ஒரு நிகழ்ச்சி மேடையில அழகா NARRATE பண்ணிட்டாரு.
விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசனை வச்சி TRAIN என்ற படத்தை இயக்கியிருக்காரு மிஷ்கின்.. சமீபத்துல தனியார் நிகழ்ச்சியில பேசுன மிஷ்கின், தன்னோட TRAIN படம் முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதைனும், ஒரு ராட்சத புழு எப்படி தன்னோட பிள்ளைகளை சுமந்துகிட்டு தவழ்ந்து தவழ்ந்து போய் எப்படி பத்திரமா வெளிய விடுதோ, அதே மாதிரிதான் டிரெய்ன் படமும்நு சொன்னாரு..
வாழவே விருப்பமில்லாத கதாநாயகன், இறப்பை நோக்கி பயணப்பட்டிட்டு இருக்கப்ப, அந்த ரயில் பயணம் ஹீரோவோட வாழ்க்கைய மாத்திடும்னு ஒன்லைன் சொன்னாரு.
இதுமட்டுமில்ல இந்த டிரெய்ன்ல நான் பயணிக்கலானா என் வாழ்க்கை மோசமா போயிருக்கும்னு ஹீரோ சொல்றதுதான் கிளைமாக்ஸ்னு படத்தோட கதை, கிளைமாக்ஸை அப்படியே சொல்லிட்டாரு மிஷ்கின்.
இதை கேட்ட ஃபேன்ஸ் மிஷ்கின் எப்பவுமே செம்ம GUTS இருக்க இயக்குநர்னும், நிச்சயமா இந்த படம் FEEL GOOD MOVIE-அ செம்மையா இருக்கும்னு புகழ்ந்துட்டு இருக்காங்க..