இத்தனை வருடமாக முதுகில் குத்தப்பட்டேன், தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளதாக நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளதாகவும், மகன்களை அல்ல என கூறியுள்ளார். மேலும், என் குழந்தைகளை விட்டு பிரியவில்லை,
அவர்கள் தான் என் சந்தோஷம், பெருமை எல்லாம் எனவும்,என் குழந்தைகளை வைத்து நிதி ஆதாயம் தேட சிலர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள ரவி மோகன்,இத்தனை ஆண்டுகள் முதுகில் குத்தப்பட்டதாகவும், தற்போது நெஞ்சில் குத்தப்படுவது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நான் கண்ணீர், ரத்தம் என துடித்துக் கொண்டிருந்தபோது, என் துன்பங்களில் இருந்து என்னை மீட்டவர் கெனிஷா பிரான்சிஸ் என்றும்,எந்த ஆதரவும் இன்றி வீட்டை விட்டு வெளியேறியபோதும் எனக்கு உறுதுணையாக நின்றவர் கெனிஷா பிரான்சிஸ் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், என் வாழ்க்கையின் துணையாக இருக்கும் கெனிஷாவை அவமதிப்பதை ஒருபோதும் தான் அனுமதிக்க மாட்டேன் எனவும் ரவி மோகன் கூறியுள்ளார்.தன்னை கணவனாக பார்க்காமல் பொன்முட்டையிடும் வாத்தாக மட்டுமே பார்த்த ஆர்த்தி, தற்போது தனது மகன்களை பார்க்க விடாமல் தடுத்து வருவதாகவும் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 16 ஆண்டுகளாக நான் அனுபவித்த கொடுமையை விட கடந்த சில நாட்களில் ஏற்பட்ட கவலை ஒன்றுமே இல்லை எனவும்,பெண்கள் தங்கள் பார்ட்னர்களிடம் அனுபவிக்கும் கொடுமை போன்று ஆண்களும் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்றும் ரவி மோகன் கூறியுள்ளார்.என்னுடைய குழந்தைகள் எப்போதும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நம்புவதாக ரவி மோகன் தெரிவித்துள்ளார்.