மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை ஷோன் ஆண்டனி, பாபு சாஹிர், சவுபின் சாகிர் ஆகிய மூவர் இணைந்து தயாரித்தனர். இதற்காக அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவரிடம் 7 கோடி ரூபாய் கடனாக பெற்றனர். ஆனால், அந்த பணத்தையோ, லாப விகிதத்தையோ திருப்பி தரவில்லையென சிராஜ் வழக்கு தொடர்ந்த நிலையில், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் மூன்று பேரும் மனு செய்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.